BMTC-2024 – விதிமுறைகளும்/விளக்கங்களும்
போட்டி விதிமுறைகள்
- தமிழ்ப் போட்டிகள், பாலர்மலர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.
- தமிழ்ப் போட்டியில் பங்குபெறுவற்கான விண்ணப்பப் படிவம் கீழே இணைக்கப் பட்டுள்ளது.
- மே 11-ஆம் நாள் குவேக்கர்ஸ்ஹில் பாலர்மலர் பள்ளியில் நடைபெறும்.
- போட்டி விபரமும் வயதுப்பிரிவுகளும் கீழே தரப்பட்டுள்ளன (பங்கேற்பாளர் வயது 01/05/2024 அன்று உள்ளபடி கணிக்கப்படும்.)
|
போட்டிக்கான விளக்கங்கள்
கீழ்க்காணூம் போட்டிகளில் எதிர்பார்க்கும் திறமை மற்றும் மதிப்பீடு செய்யும் முறை பற்றிய விளக்கங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன
குழந்தைப் பாட்டுப் போட்டி
இப்போட்டிக்கு இரண்டு பாடல்கள் கொடுக்கப்படும், ஏதேனும் ஒரு பாடலை மனனம் செய்துக் கூறவேண்டும். பொருளைக் கூற வேண்டியதில்லை
பழமொழி/பொன் மொழிகள் போட்டி
இப்போட்டிக்கு இரண்டு ஐந்து கோப்பு பழமொழி/பொன் மொழிகள் கொடுக்கப்படும், ஏதேனும் ஐந்து பழமொழி/ பொன் மொழிகள் மனனம் செய்துக் கூறவேண்டும். பொருளைக் கூற கூறவேண்டும்.
திருக்குறள் மனனப் போட்டி
இப்போட்டிக்கு ஐந்து திருக்குறள்கள் பொருளுடன் கொடுக்கப்படும் ஐந்து திருக்குறளையும் பொருள் மாறாமல் பிழையின்றி தெளிவாக கூறவேண்டும். திருக்குறளையும், பொருளையும் சொல்வது மட்டுமே போதுமானது. ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஐந்து நிமிடங்கள் வழங்கப்படும்.
கதை சொல்லும் போட்டி
இப்போட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளத் தலைப்புகளில் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து தங்கள் திறமையை முன்னிறுத்தி தங்குத்தடையின்றி ஆங்கிலம் கலக்காமல் கதை சொல்ல வேண்டும். ஒவ்வொரு போட்டியாளருக்கும் மூன்று நிமிடங்கள் வழங்கப்படும்.
ஓரங்க நாடகம்/உரையாடல் போட்டி
இப்போட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளத் தலைப்புகளில் எதெனும் ஒரு நிகழ்ச்சியை அல்லது உரையாடலை ஒரு சில களங்களில் முழுமைப்படுத்திக் காட்டும் நாடகம் ஓரங்க நாடகம் ஆகும். ஒவ்வொரு போட்டியாளருக்கும் மூன்று நிமிடங்கள் வழங்கப்படும்.
விவாதம் போட்டி/பேச்சுப் போட்டி
இப்போட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளத் தலைப்புகளில் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து மூன்று நிமிடங்கள் ஆம் அல்லது இல்லை என்று விவாதிக்க வேண்டும்.
கட்டுரைப் போட்டி (30 mins)
இப்போட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளத் தலைப்புகளில் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்த
250 சொற்கள் வரை கொண்டு கட்டுரை எழுதுக
கதை எழுதும் போட்டி (30 mins)
கொடுக்கபடும் படங்களை கொண்டு கதை எழுதுக:-
அடிப்படை எழுத்து அறிவு போட்டி (30 mins)
கொடுக்கபடும் படம் மற்றும் குறிப்பைக் கொண்டு கதை எழுதுக:-
குழுப்போட்டி
- வினாடி வினா (5 students) – கீழ்காணும் தலைப்புக்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்
-
- இலக்கணம்
- இலக்கியம்
- தமிழ் அறிஞர்
- கலை
- பண்பாடு
- வரலாறு
- மரபு
- கலாச்சாரம்
- குறுநாடகம் (3 to 5 students)
-
- ஏதேனும் ஒரு தமிழ்மொழியை ஒற்றிய தலைப்பில் குழுவாக நடித்து காட்ட வேண்டும்
மதிப்பீடு செய்யும் முறை
போட்டியின் போது தலைப்புக்கு ஏற்ப கருத்து, கருத்தின் ஆழம், இலக்கண மரபு, உச்சரிப்பு, பொருள் உணர்ந்து கூறுதல், சபை மரபு, நடிப்பு, மனனம் மற்றும் பேசும் திறமை போன்றவை கவனிக்கப்படும்.
குழு வினாடி வினாப் போட்டிக்கான விதிமுறைகளும்/விளக்கங்களும்
- போட்டியில் பங்கு பெறுபவர் 10 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும்.
கீழே உள்ள வகைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்
-
- வினாடி வினா – (10 -13 years )
- வினாடி வினா – (14 years and above)
- வினாடி வினா – Bridging/Smart class students
- ஒரு குழுவில் 5 மாணவர்கள் வரை இருக்கலாம்.
- கேள்விகள் கீழ்வரும் தலைப்புகளில் இருந்தே கேட்கப்படும்.
-
- இலக்கணம்
- இலக்கியம்
- தமிழ் அறிஞர்
- கலை
- பண்பாடு
- வரலாறு
- மரபு
- கலாச்சாரம்
- ஒவ்வொரு குழுவும் தங்கள் கேள்விக்கான பதிலை 30 வினாடிகளுக்குள் தர வேண்டும். அக்குழு தேர்ந்தெடுத்த முதல் போட்டியாளர் மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் சரியான பதிலளித்தால் 10 புள்ளிகளும், கலந்தாலோசித்து சரியான பதிலளித்தால் 5 புள்ளிகளும் வழங்கப்படும். தவறாக பதிலளிக்கும் பட்சத்தில் அந்தக் கேள்வி அடுத்த குழுவிடம் கேட்கப்படும். அடுத்த குழு சரியான பதிலளித்தால் 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
- போட்டிகள் இரண்டு குழுக்களிடையே நடைபெறும். வினாக்கள் இரு குழுக்களுக்கிடையே மாறி மாறி கேட்கப்படும். கேள்விக்கான பதில்களை சத்தமாகவும் தெளிவாகவும் கொடுத்தல் அவசியம்.
- முதல் சுற்றில் எல்லா தலைப்புகளிருந்தும் அடிப்படை கேள்விகள் இருக்கும்.
- அடுத்து வரும் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு தலைப்பு – பாலர் மலர் சுழற்சக்கரத்தை சுற்றி தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுத்த தலைப்பிலிருந்து 5 கேள்விகள் கேட்கப்படும். பத்து கேள்விகளின் முடிவில் எந்தக் குழு அதிகமான மதிப்பெண்கள் பெறுகிறதோ அந்தக் குழு அடுத்த சுற்றிற்கு முன்னேறும்.
- தவறான பதிலுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படமாட்டாது
- கடைசிச் சுற்றில் அதிக மதிப்பெண்கள் பெறும் குழு முதல் பரிசையும், அடுத்த குழு இரண்டாவது பரிசையும் பெறும்.