Amazing Success! Balar Malar Annual Day 2025

மகத்தான வெற்றி! பாலர் மலர் பள்ளி ஆண்டு விழா 2025!
நம் பாலர் மலர் பள்ளி ஆண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (16/11/25) மிக சிறப்பாக நடந்து முடிந்தது! மேடையில் பிரகாசித்த எங்கள் மாணவர்களின் அசாதாரண கலை திறமைகளைக் கண்டு நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.இந்த பிரமாண்டமான நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்த எங்கள் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களுக்கும் மற்றும் ஆதரவு அளித்த பெற்றோர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் ஊக்கமும் ஆதரவும் ஈடு இணையற்றது!

திரைக்குப் பின்னால் இருந்து, அயராது உழைத்து, எங்கள் நிகழ்ச்சியின் முதுகெலும்பாகச் செயல்பட்ட, அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு எங்கள் சிறப்பு நன்றி உரித்தாகட்டும்! உங்கள் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. தொழில்நுட்பக் குழுவுக்கு மற்றும் நேரடி ஒளிபரப்பு (Live Stream) ஆகியவற்றை ஒருங்கிணைக்க, இடைவிடாமல் உழைத்த எங்கள் IT குழுவுக்கு ஒரு பெரிய நன்றி!

இந்த முறை, எங்கள் நேரடி ஒளிபரப்பு இப்போதே 3.6K பார்வைகளைக் கடந்துவிட்டது! (https://www.youtube.com/watch?v=_bIRJjRZ7nQ). இந்த நாளை பாலர் மலர் பள்ளி வரலாற்றில் மறக்க முடியாததாக நாளாக மாற்றி அமைத்ததற்கு நன்றி! அனைவருக்கும் நன்றி!

[easy-image-collage id=5003]

[easy-image-collage id=5004]

[easy-image-collage id=5005]

[easy-image-collage id=5006]