மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாலர் மலர் செவன் ஹில்ஸ் தமிழ் பள்ளி மாணவர்களுக்ககான தகுதி விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தவறாமல் வீட்டுப்பாடங்களை முடிக்கும் , பள்ளிக்குத் தவறாமல் செல்லும், அதிகமான தமிழ் புத்தகங்களைப் படிக்கும் என மேலும் பல சிறப்பான வேலைகளை செய்யும் மாணவர்களை பாராட்டி அங்கீகரிக்கவே இந்த விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களும் இந்த விருதுகளை பெறும் வாய்ப்பை அதிகரிக்க ஏழு வெவ்வேறு வகையான விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் வருகை, விடாமுயற்சி , உற்சாகமாகக் கற்றல் மற்றும் தலைமைத்துவ பண்புகளுக்காக மாணவர்களை ஊக்கப்படுத்த ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பினை இது ஏற்படுத்தியுள்ளது.அதிக விருதுகள் பெறும் மாணவர்கள் முதல்வர் விருதுகள்(மெடல்) பெறுமாறும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களையும், பெற்றோர்களையும் கவரும் இந்த அற்புதமான/வண்ணமயமான முயற்சியை முன்னெடுத்த செவன்ஹில்ஸ் முதல்வர் திருமதி வைதேகிக்கும் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி முழுமையாக நடைமுறை வடிவம் கொண்டுவர பணியாற்றிய திரு. சக்தி தலைமையிலான பாலர் மலர் நிர்வாகக் குழுவிற்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
Balar Malar Seven Hills Tamil School Merit Awards are being introduced to motivate students to regularly complete homework, attend school, read more Tamil books, etc. and recognise students for their commendable work.
There are seven different award categories introduced to increase the chance for every student to get at least one award every term. The merit system will allow teachers to reward students for their good attendance, diligent work ethics, enthusiasm and leadership. If a student does not fulfill the criteria for any of these awards, teachers are encouraged to motivate the student to receive the award for next term.
To further encourage our students, we are also introducing BMSH Principal Medal.
Thanks to BMSH Principal Vaidehi Teacher for this wonderful and colourful initiative. No doubts, this will definitely attract students and parents.
Well done BMSH President Sakthi and the entire BMSH Admin team for their amazing support and efforts to bring this in to live.