பாலர் மலர் தமிழ்ப்போட்டி

BMTC 2026

நாற்பத்தி ஒன்பது (49) ஆண்டுகளுக்கு முன், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், தமிழ் மொழியும் கலாச்சாரமும் நிலைத்திருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் பாலர் மலர் தமிழ் கல்விக் கழகம் நிறுவப்பட்டது. இந்நாள் வரை ஆஷ்பீல்ட், ஹோல்ஸ்வர்தி, ஹார்ன்ஸ்பி (செர்ரிபுரூக்), மிண்டோ, நியூகாசில், மார்ஸ்டன் பார்க், குவேக்கர்ஸ்ஹில், உளங்காங்கு, செவன் ஹில்ஸ் (பிளாக்டவுன்), ஒரிம்பா மற்றும் பராமட்டா கிளைகளில் இயங்கி வரும் தமிழ்ப் பள்ளிகள் மூலம், இளைய தலைமுறையினருக்குத் தமிழ் மொழியும் தமிழரின் பண்பாடும் மரபும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.


பதிமூன்று (13) ஆண்டுகளுக்கு முன், செவன் ஹில்ஸ் தமிழ்ப் பள்ளியில் தொடங்கப்பட்ட “தமிழ்ப் போட்டிகள்,” தற்போது BMTC – Balar Malar Tamil Competitions என்கிற பெயரில், ஆண்டுதோறும் அனைத்து பாலர் மலர் பள்ளிகளின் மாணவர்களுக்கும் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு மாநிலளாவிய மேடையாகத் திகழ்கின்றது.


BMTC–2026 இந்த ஆண்டும் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெறவிருக்கிறது! மாணவர்களின் தமிழ் மொழித் திறன்கள் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான மேடையாக இந்த போட்டிகள் அமைந்துள்ளன.


BMTC-2026 போட்டிகளை ஒழுங்கமைக்கும் பணியை செய்வதில் பாலர் மலர் ஹோல்ஸ்வொர்த்தி தமிழ்ப் பள்ளி பெருமை அடைகிறது. இப்போட்டிகளில் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற அனைவரையும் வாழ்த்துகிறோம்.

 

📅 தேதி: மே 30, 2026
📍 இடம்: Holsworthy Public School
🏫 முகவரி: 36 Infantry Parade, Holsworthy NSW 2173

🔔 முக்கிய தேதிகள்:

  • பதிவு முடிவுத் தேதி: 15.05.2026 (வெள்ளிக்கிழமை), இரவு 11:59PM
  • போட்டி நடைபெறும் நாள்: 30.05.2026 (சனிக்கிழமை)

Balar Malar Tamil competitions 2025 Information Pack – விதிமுறைகளும்/விளக்கங்களும்

Registration for Competitions
Note:
  1. Entering your email address will allow you to get your children details to start registering for Competition
  2. Use the same email address used in the enrolment
Login Details
Verify Email OTP

We have sent an email to containing a 6-digit verification code.


Didn’t receive a code in your email? you can