BMTC-2024
நாற்பத்தாறு (46) ஆண்டுகளுக்கு முன் பாலர் மலர் தமிழ் கல்விக் கழகம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தொடங்கப்பட்டது. பாலர் மலர் கிளைகளான ஆஷ்பீல்ட், ஹோல்ஸ்வர்தி, ஹார்ன்ஸ்பி(செர்ரிபுரூக்), மிண்டோ, நியூகாசில், குவேக்கர்ஸ்ஹில், உளங்காங்கு மற்றும் செவன் ஹில்ஸ் (பிளாக்டவுன்) தமிழ்ப் பள்ளிகளின் மூலம் தாய் மொழியான தமிழையும், தமிழரின் கலாச்சாரத்தையும் இளைய தலைமுறையினருக்கு கற்பித்து வருகின்றது.
பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு செவன் ஹில்ஸ் கிளையில் தொடங்கப்பட்ட தமிழ்ப் போட்டிகள், கடந்த பதினோரு ஆண்டுகளாக “பாலர் மலர் தமிழ்ப் போட்டிகள்” என்று பாலர் மலர் தமிழ்க் கல்விக் கழக அளவில் நடத்தப்பட்டு வருகின்றது.
இப்போட்டிகள், அனைத்து பாலர் மலர் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் களமாகவும் விளங்குகின்றது. இவ்வாண்டு ஒரு சில போட்டிகள் மெருகேற்றப்பட்டும் புதிதாக குழுப்போட்டிகளும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
2024ம் ஆண்டிற்கான தமிழ் திறமை போட்டிகளை பாலர் மலர் குவேக்கர்ஸ்ஹில் தமிழ்ப் பள்ளியில் நடத்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். இப்போட்டிகளில் பங்கு பெற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்திப் பரிசுகளை வென்றெடுக்க அனைத்து மாணவச் செல்வங்களையும் எமது பள்ளியின் சார்பில் வாழ்த்துகின்றோம்.
ID | NAME/Link to Content | age | DATE FROM | DATE TO |
1 | குழந்தைப் பாட்டுப்போட்டி | 3 முதல் 5 வயது | 2018-05-01 | 2021-04-30 |
2 | பழமொழி-பொன் மொழிகள் | 6 முதல் 7 வயது | 2016-05-01 | 2018-04-30 |
3 | திருக்குறள்-செய்யுள் மனனப்போட்டி | 8 முதல் 9 வயது | 2014-05-01 | 2016-04-30 |
4 | கதை சொல்லும் போட்டி | 10 முதல் 11 வயது | 2012-05-01 | 2014-04-30 |
5 | பேச்சுப் போட்டி | 12 முதல் 13 வயது | 2010-05-01 | 2012-04-30 |
6 | விவாதம் (Persuasive speech ) | 14 முதல் 15 வயது | 2008-05-01 | 2010-04-30 |
7 | ஓரங்க நாடகம்- உரையாடல் (Mono acting) | 14 வயதுக்கு மேற்பட்டோர் | 2003-05-01 | 2010-04-30 |
8 | கட்டுரைப் போட்டி | 14 வயதுக்கு மேற்பட்டோர் | 2003-05-01 | 2010-04-30 |
9 | கதை எழுதும் போட்டி | 12 முதல் 13 வயது | 2010-05-01 | 2012-04-30 |
10 | அடிப்படை எழுத்து அறிவு போட்டி. | 10 முதல் 11 வயது | 2012-05-01 | 2014-04-30 |
11 | குழுப்போட்டி வினாடி வினா (5 students) | 10 years and above | 2003-05-01 | 2014-04-30 |
12 | குழுப்போட்டி குறுநாடகம் (3 to 5 students) | 10 years and above | 2003-05-01 | 2013-04-30 |
மே 11-ஆம் நாள் பாலர் மலர் தமிழ்ப்பள்ளி – குவேக்கர்ஸ்ஹில்
We are excited to announce that this year’s Balar Malar Tamil Competition is on May 11th at Balar Malar Quakershill
Here are some important dates to remember:
Competition Date: 11.05.2024
Registration closing date : 04.05.2024 , Saturday – 11.59PM
Venue :
பாலர் மலர் குவேக்கர்ஸ்ஹில் – BALAR MALAR QUAKERSHILL
70 Lalor Rd, Quakers Hill, NSW 2763
Please note that there will be no applications accepted after the registration deadline.