BMTC-2025
பாலர் மலர் தமிழ்ப்போட்டி – BMTC 2025
📅 தேதி: செப்டம்பர் 13, 2025
📍 இடம்: Blacktown Boys High School
முகவரி: Fifth Ave, Blacktown NSW 2148
நாற்பத்து எட்டு (48) ஆண்டுகளுக்கு முன், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், தமிழ் மொழியும் கலாச்சாரமும் நிலைத்திருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் பாலர் மலர் தமிழ் கல்விக் கழகம் நிறுவப்பட்டது. இந்நாள் வரை ஆஷ்பீல்ட், ஹோல்ஸ்வர்தி, ஹார்ன்ஸ்பி (செர்ரிபுரூக்), மிண்டோ, மார்ஸ்டன் பார்க், நியூகாசில், குவேக்கர்ஸ்ஹில், உளங்காங்கு மற்றும் செவன் ஹில்ஸ் (பிளாக்டவுன்) கிளைகளில் இயங்கி வரும் தமிழ்ப் பள்ளிகள் மூலம், இளைய தலைமுறையினருக்குத் தமிழ் மொழியும் தமிழரின் பண்பாடும் மரபும் பயிற்றப்பட்டு வருகின்றன.
பதினின்று (12) ஆண்டுகளுக்கு முன், செவன் ஹில்ஸ் தமிழ்ப் பள்ளியில் தொடங்கப்பட்ட “தமிழ்ப் போட்டிகள்,” தற்போது BMTC – Balarmalar Tamil Competitions என்கிற பெயரில், ஆண்டுதோறும் அனைத்து பாலர் மலர் பள்ளிகளின் மாணவர்களுக்கும் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு மாநிலளாவிய மேடையாகத் திகழ்கின்றது.
இந்த ஆண்டின் BMTC-2025 போட்டிகள், பல்வேறு பிரிவுகளில் மேலும் பரந்தளவில் மேற்கொள்ளப்படவுள்ளதோடு, சில புதிய குழுப் போட்டிகளும் (Group Events) அறிமுகமாகின்றன. மாணவர்களின் மொழியாற்றலும், மேடைத் திறமைகளும் ஒளிரும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.
BMTC-2025 போட்டிகளை பாலர் மலர் செவன் ஹில்ஸ் (பிளாக்டவுன் Boys HIGH SCHOOL) தமிழ்ப் பள்ளி ஒழுங்கமைக்கும் பெருமை அடைகிறது. இவ்விழாவில் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற அனைவரையும் வாழ்த்துகிறோம்.
BMTC–2025 இந்த ஆண்டும் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெறவிருக்கிறது! மாணவர்களின் தமிழ் மொழித் திறன்கள் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான மேடையாக இந்த போட்டிகள் அமைந்துள்ளன.
🔔 முக்கிய தேதிகள்:
- போட்டி நடைபெறும் நாள்: 13.09.2025 (சனிக்கிழமை)
- பதிவு முடிவுத் தேதி: 23.08.2025 (சனிக்கிழமை), இரவு 11:59PM
Balar Malar Tamil competitions 2025 Information Pack – விதிமுறைகளும்/விளக்கங்களும்
