Balar Malar Reading challenge book release function
பாலர் மலர் மாணவ மாணவியர் எழுதிய புத்தகங்கள் வெளியிடும் விழா
மாணவர்களுக்கு தமிழ்ப் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக, பாலர் மலர் மாணவ மாணவியர்களே புத்தகம் எழுதும் ஒரு திட்டத்தை உருவாக்கி மாணவ மாணவியர்களின் எழுத்தார்வத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து அனைத்து பாலர் மலர் பள்ளிகளும் சேர்ந்து 123 புத்தங்களுக்கும் மேல் உருவாக்கியுள்ளோம். . கடந்த ஆறு மாதங்கள் கடின உழைப்பிற்குப்பின் அனைத்து புத்தகங்களும் அச்சில் ஏறி இன்று ஜூன் 26ம் தேதி இந்த விழா இங்கு சிட்னியின் காசில்ஹில் பயனியர் அரங்கத்தில் மிக பிரமாண்டமாக நடந்தேறியது. இந்த திட்டத்திற்கு நிதி உதவி செய்த நம் மாநில அரசாங்கத்திற்கும் பல்கலாச்சார அமைப்பிற்கும் நமது நன்றிகள். இதனை புத்தக வெளியீட்டு விழாவாக நடப்பதற்கு ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநில பல்கலாச்சாரச் துறை தேவையான மானியம் வழங்கி உதவியுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த பாலர் மலர் சொந்தங்களுக்கும், உலகெங்கும் இருந்து நம் மாணவர்களை இந்த விழாவில் வாழ்த்திய அனைத்து தமிழ் சஙகங்களுக்கும் பாலர் மலரின் நெஞ்சார்ந்த நன்றிகள்.