பாலர் மலர் ஆண்டு விழா 2022

ஊர் கூடி தேரிழுப்பது போல நாம் கூடி இழுத்த பாலர் மலர் ஆண்டுவிழா 2022,
1900 க்கும் மேற்பட்ட விருந்தினர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.
உணவுக்கு உதவிட்ட ஹோல்ஸ்வொர்த்திக்கும் ,
மேடையைப் பேச வைத்த‌ செவன்ஹில்ஸ் பள்ளிக்கும்,
ஆண்டு மலரை மணக்க வைத்த நியூகாசில் பள்ளிக்கும்,
பரிசுச் சான்றிதழ்களை தயார் செய்த மிண்டோ பள்ளிக்கும்,
விருந்தினர்களை அழைத்து வந்த குவாக்கர்ஸ்ஹில்ஸ் பள்ளிக்கும்,
கூட்டத்தை ஒழுங்கு படுத்திய செர்ரிபுரூக் பள்ளிக்கும்,
பிரம்மாண்டத்தைக் கொடுத்த பாலர் மலர் தலைமைக்கும்,
நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த கல்விக்குழுவிற்கும்,
நேரடியாக வலை ஒளித்தளத்தில் ஒளிபரப்பிய‌ தொழில்நுட்ப குழுவிற்கும்,
கலை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மற்றும் விழாவில் கை கொடுத்த பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் ,
நமது பள்ளியின் தூண்களான ஆசிரியர்களுக்கும் ,
ஐம்பது நிகழ்ச்சிகளையும் அருமையாக அரங்கேற்றிய மாணவச் செல்வங்களுக்கும்
பாலர் மலரின் சார்பாக மிக்க நன்றி.
நல்லதை மனதில் வைத்து போகிக்காக மற்றதை ஒதுக்கி வைத்து,
பாலர் மலரின் வள‌ர்ச்சி நம் அடுத்த சந்ததியின் வளர்ச்சியாதலால்
ஒன்றே தமிழ் ஒன்றே பாலர் மலர் எனக்கூறி அடுத்த வருடம் இன்னும் சிறப்பாய் இனிதாய் கொண்டாட முனைவோம்.
நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏🙏 நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏
என்றும் அன்புடன்,
பாலர் மலர் அலுவலக குழு.